Enable Javscript for better performance
குண்டர் தடுப்புச் சட்டத்தில் 2 இளைஞர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    குண்டர் தடுப்புச் சட்டத்தில் 2 இளைஞர்கள் கைது

    By திண்டுக்கல்,  |   Published on : 24th May 2014 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் 2 பேர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பா.ராஜ்குமார்(எ) ஊசிராஜ்குமார்(26). கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவர் மீது, திண்டுக்கல் நகர் வடக்கு, தெற்கு மற்றும் தேனி அல்லிநகரம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    ராஜ்குமாரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.ஜெயசந்திரன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்பேரில் ஆட்சியர் ந.வெங்கடாசலம், அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரத்தைச் சேர்ந்தவர் அ.ஜேம்ஸ்(எ) அன்பரசன்(26). தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவர் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் எஸ்.பி. ஜெயசந்திரன் பரிந்துரையின் பேரில், அன்பரசனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai