Enable Javscript for better performance
திண்டுக்கல் மாவட்டத்தில் 90 சதவீதம் பேர் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டத்தில் 90 சதவீதம் பேர் தேர்ச்சி

    By திண்டுக்கல்,  |   Published on : 24th May 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்தாம் வகுப்பு தேர்வுகளில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் 90 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 27 முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் திண்டுக்கல் கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 30,678 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.

    இதில் 1100 பேர் பல்வேறு காரணங்களுக்காக தேர்வு எழுதவில்லை. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை(மே 23) தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்வு எழுதிய 29,578 மாணவர்களில் 26,573 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் கடந்த ஆண்டு 88.61 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகீதம், இந்த ஆண்டு 1.23 சதவீதம் உயரந்து 89.84ஆக அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் 15,164 மாணவர்களும், 14,414 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 13,089 மாணவர்களும், 13,484 மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 86.31ஆக இருக்கும் நிலையில், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 93.54 சதவீகிதமாக உள்ளது. தேர்வு எழுதிய மாணவர்களில் 2,075 பேரும், மாணவிகளில் 930 பேரும் தேர்ச்சி பெறவில்லை.

    மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் விவரம்:

    எஸ்.ஷிஃபானா பர்வீன்(எஸ்எம்பிஎம் மெட்ரிக். பள்ளி,திண்டுக்கல்) மற்றும் ஆர்.தாரணி(ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக். பள்ளி, ஒட்டன்சத்திரம்) ஆகியோர் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2ஆம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளனர்.

    ஜெ.லாரா ட்ரினிடா(புனித வளனார் மெட்ரிக். பள்ளி திண்டுக்கல்) மற்றும் என்.ஆர்.சுதன்(தேவி மெட்ரிக். பள்ளி, பழனி) ஆகியோர் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3 ஆவது இடமும், மாவட்ட அளவில் 2ஆம் இடமும் பிடித்துள்ளனர். ஆர்.கௌசிகா(அக்ஷயா அகாதெமி மெட்ரிக். பள்ளி, பழனி), என்.நவீன்குமார், பி.வர்ஷா, தி.வினோதா(ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக். பள்ளி, ஒட்டன்சத்திரம்), பி.சக்தி ப்ரீத்தி(எஸ்எம்பிஎம் மெட்ரிக். பள்ளி, திண்டுக்கல்), ஜெ.ஆர்.சிந்தியா(புனித பீட்டர்ஸ் மெட்ரிக். பள்ளி, கொடைக்கானல்), ஆர்.ஷ்ருதி(தேவி மெட்ரிக். பள்ளி, பழனி) ஆகிய 7 மாணவர்கள் 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 3ஆம் இடம் பெற்றுள்ளனர்.

    மாவட்டத்தில் உள்ள 17 அரசு பள்ளிகள், 80 அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சிப் பெற்றுள்ளன.

    முழு மதிப்பெண்:

    ஆங்கில பாடத்தில் 3 பேர், கணக்கு பாடத்தில் 203 பேர், அறிவியல் பாடத்தில் 906 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 369 பேர் என மொத்தம் 1481 மாணவர்கள், அந்தந்த பாடத்தில் முழு மதிப்பெண்களை(100க்கு 100) பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பா.சுகுமார் தேவதாஸ், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai