Enable Javscript for better performance
பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 74 லட்சத்தைத் தாண்டியது- Dinamani

சுடச்சுட

    

    பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 74 லட்சத்தைத் தாண்டியது

    By பழனி,  |   Published on : 24th May 2014 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி கோயில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரூ.74 லட்சத்தைத் தாண்டியது.

    பழனியில் கோடைகால விடுமுறையைத் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பக்தர்கள் மட்டுமன்றி, கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகள் என ஏராளமானோர் வந்து சென்றதால், கோயில் உண்டியல்கள் நிறைந்தன.

    இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப் பணம் ரூ.74 லட்சத்து 21 ஆயிரத்து 45 கிடைத்தது. தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பூரண கும்பம், வேல், செயின், கொலுசு, டாலர், தாலி, காவடி, உருவங்கள் என ஏராளமாக பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். தங்கம் 108 கிராமும், வெள்ளி ஆயிரத்து 160 கிராமும் வரப்பெற்றிருந்தன. இவை தவிர, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், குவைத் என பல்வேறு நாட்டு நாணயங்களும், டாலர்களும் உண்டியலில் கிடைத்தன. மொத்தம் 72 வெளிநாட்டு கரன்சிகள் வரப்பெற்றன. பல பக்தர்கள் வாட்ச், நவதானியங்கள், பட்டுச் சேலைகள், பித்தளை பாத்திரங்கள், செல்போன் ஆகியவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணிக்கையின்போது பழனி கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai