Enable Javscript for better performance
பெண் அதிகாரி மீது லாரி மோதல்:சரக்கு லாரிகள் சிறைப் பிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெண் அதிகாரி மீது லாரி மோதல்:சரக்கு லாரிகள் சிறைப் பிடிப்பு

    By திண்டுக்கல்  |   Published on : 24th May 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெண் ரயில்வே அதிகாரி மீது லாரி மோதியதாக கூறி, சரக்கு லாரிகளை சிறைப்பிடித்து ரயில்வே காலனி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இளநிலை பொறியாளராக உள்ள பெண் அதிகாரி வெள்ளிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில், ரயில் நிலைய வளாகத்திலிருந்து சென்றுள்ளார்.

    அப்போது ரயில் நிலையத்திலிருந்து சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரி, அவர் மீது மோதும்படி வந்ததாம்.

    வாகனத்தை வேறு திசையில் திருப்பி, விபத்திலிருந்து அந்த அதிகாரி தப்பியுள்ளார்.

    இதையடுத்து ரயில்வே காலனியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள், சரக்கு ஏற்றிச் சென்ற லாரிகளை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சரக்கு வாகனங்கள் வெளியேற முடியாமல் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.

    சரக்கு லாரிகள் அதிவேகமாக இயக்கப்படுவதாக கூறி, அடிக்கடி அந்த பகுதியில் இதுபோன்ற மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பழனி பொள்ளாச்சி அகல ரயில்பாதை பணிகளை ஆய்வு செய்த, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ்மிஸ்ரா திண்டுக்கல் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    லாரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், பொதுமேலாளரின் கவனத்தை ஈர்ப்பதற்காக லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தப்படுவதாக லாரி ஓட்டுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ரயில்வே அதிகாரிகளும், போலீஸாரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இரவு 8.30 மணி வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. அப்போது லாரி ஓட்டுநர்களுக்கும், ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. போலீஸாரின் சமரசத்திற்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai