Enable Javscript for better performance
பேக்கரியில் தீ விபத்து: ரூ.2 லட்சம் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில், பேக்கரி எரிந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

    திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வெள்ளிக்கிழமை காலை தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதியினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்த சென்ற தீயணைப்பு வீரர்கள், கடையின் பூட்டை உடைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். விபத்தில், கடையில் வைக்கப்பட்டிருந்த மின்சாதனப் பொருள்களும், உணவுப் பொருள்களும் கருகி சேதமடைந்தன. அதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கடை உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai