Enable Javscript for better performance
பொள்ளாச்சி- பழனி அகல ரயில்பாதை:தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி- பழனி அகல ரயில்பாதை:தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

    By திண்டுக்கல்,  |   Published on : 24th May 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி- பொள்ளாச்சி இடையே நடைபெற்று வரும் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ்மிஸ்ரா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

    பொள்ளாச்சியிலிருந்து பழனி வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: பழனி- பொள்ளாச்சி இடையிலான அகல ரயில்பாதை பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. பாதையை சீர்படுத்துவதற்கான இயந்திரம் வந்தவுடன், அந்த பணிகளும் நிறைவு பெறும்.

    எனினும் பழனி- பொள்ளாச்சி இடையே உடனடியாக ரயில் இயக்க முடியாத நிலை உள்ளது. கோவை அல்லது பாலக்காடு வரை முழுமையாக பாதை அமைத்தால் மட்டுமே ரயில் சேவையை துவக்க முடியும். புதிததாக அமைய உள்ள மத்திய அரசின் மூலம் தாக்கல் செய்யப்படும் ரயில்வே நிதி நிலை அறிக்கையில், இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நிதி கிடைத்தால், தீபாவளி பண்டிகைக்கு முன்னர் அகல பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெறும். விருதுநகர்- திருநெல்வேலி இடையே மின் ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 3 மாதத்துக்குள் அந்தப் பணிகள் முடிவடையும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai