Enable Javscript for better performance
மாநில கல்வி முறைக்கு ஏற்ப பாடப்பிரிவுகளின் பெயர்கள் மாற்றி அமைக்கப்படும்- Dinamani

சுடச்சுட

    

    மாநில கல்வி முறைக்கு ஏற்ப பாடப்பிரிவுகளின் பெயர்கள் மாற்றி அமைக்கப்படும்

    By திண்டுக்கல்,  |   Published on : 24th May 2014 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில கல்வி முறைக்கு இணையாக, காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் பாடப்பிரிவுகளின் பெயர்கள் மாற்றி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என புதிய துணைவேந்தராக பொறுப்பேற்ற எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

    காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 10-ஆவது துணைவேந்தராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட அவர், செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

    கிராமப்புற வளர்ச்சியை ஏற்படுத்துவதே இந்த பல்கலைக்கழகத்தின் முக்கிய குறிக்கோள். கிராமப்புற வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழில்கள் மற்றும் சுகாதார முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

    மாணவர்கள் பட்டம் பெறுவதோடு நின்றுவிடாமல், அடுத்தக்கட்டமாக உடனடி வேலைவாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மண்புழு உரம், இயற்கை உரம் தயாரித்தல், சாகுபடி செய்யப்படும் பொருள்களை தகுந்த விலைக்கு விற்பனை செய்தல், பெயின்டிங், பிளம்பிங், மின்சாதன பழுது நீக்குதல், தையல், உள்ளிட்ட சிறுதொழில்களை மேம்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

    முதுகலை, எம்.பில் மற்றும் முனைவர் பட்டம் பெறுவோர், அறிவியல் மற்றும் தேசிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறவும், இளங்கலை மற்றும் பட்டையம் பெற்றவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறவும், சான்றிதழ் படிப்புகளில் தேர்ச்சி பெறும் இளைஞர்களுக்கு, கிராமப்புறங்களில் திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும்.

    மேலும் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, சுற்றுச்சூழல் மாற்றம், வேளாண்மை சார்ந்த வணிகம், பயிர் காப்பீடு, ஊரக வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில், தற்போது ஏற்பட்டு வரும் நவீன வளர்ச்சிகள் மற்றும் தீர்வுகள் குறித்து கிராமப்புற மக்களுக்கு பயிற்சி அளிக்க மையங்கள் உருவாக்கப்படும் என்றார்.

    காந்திகிராம பல்கலையில் வழங்கப்படும் சில பட்டங்கள், தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் பாடத்திட்டத்திற்கு இணையானது இல்லை என அறிவிக்கப்படுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்:

    அதுபோன்ற பாடப்பிரிவுகளில் காந்திகிராம பல்கலை.யில் கூடுதலாக கற்றுக் கொடுக்கப்படுவதால், பாடப்பிரிவுகளின் பெயரில் வித்தியாசம் காணப்படுகிறது. எனினும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் மாநில அரசின் திட்டத்திற்கு இணையாக பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai