Enable Javscript for better performance
அதிக மாணவிகளுடன் தேர்வு எழுதி சாதனை படைத்த பெண்கள் பள்ளிகள்- Dinamani

சுடச்சுட

    

    அதிக மாணவிகளுடன் தேர்வு எழுதி சாதனை படைத்த பெண்கள் பள்ளிகள்

    By திண்டுக்கல்  |   Published on : 25th May 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    400 முதல் 700க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் தேர்வு எழுதிய 2 பெண்கள் பள்ளிகள் முழுமையான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி கல்வி மாவட்டத்தில் 146 பள்ளிகள், திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 171 பள்ளிகள் என மொத்தம் 317 பள்ளிகளைச் சேர்ந்த 29,578 மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். வெள்ளிக்கிழமை வெளியான தேர்வு முடிவுகளின்படி 26,573 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள்:

    பழனி கல்வி மாவட்டத்தில் 10 அரசு பள்ளிகளும், 9 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 4 சுயநிதி பள்ளிகளும், 33 மெட்ரிக் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சிப் பெற்றுள்ளன. அதேபோல் திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 7 அரசு பள்ளிகள், 11 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1 சுயநிதி பள்ளி, 25 மெட்ரிக் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தன.

    அதிக மாணவர்களுடன் தேர்வில் பங்கேற்ற பள்ளிகள்:

    பழனி கல்வி மாவட்டத்தில் 451 மாணவிகள் தேர்வு எழுதிய பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 347 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.(தேர்ச்சி விகிதம் 76.94). 440 மாணவர்கள் தேர்வு எழுதிய நெய்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் 368 பேரும்(தேர்ச்சி விகிதம் 83.64), 291 மாணவர்கள் தேர்வு எழுதிய வேடசந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 214 பேரும்(தேர்ச்சி விகிதம் 73.54) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதேபோல் திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில், 7 பள்ளிகள் சார்பில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். அதிகபட்சமாக 709 மாணவிகள் தேர்வு எழுதிய திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், 437 மாணவிகள் தேர்வு எழுதிய திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் 100 சதவீத தேர்ச்சிப் பெற்றுள்ளன.

    700 மாணவர்கள் தேர்வு எழுதிய திண்டுக்கல் எம்எஸ்பி எஸ்என் நினைவு மேல்நிலைப் பள்ளியில் 694 பேரும், 668 மாணவர்கள் தேர்வு எழுதிய திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 661 பேரும், 568 மாணவர்கள் தேர்வு எழுதிய பட்டியவீரன்பட்டி என்எஸ்எஸ்0வி மேல்நிலைப் பள்ளியில் 470 பேரும், 555 பேர் தேர்வு எழுதிய திண்டுக்கல் புனித லூர்து அன்னை பள்ளியில் 550 பேரும், 442 பேர் தேர்வு எழுதிய கொசவப்பட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் 416 மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றனர். இந்த பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் முறையே 99.14, 98.95, 82.75, 99.10, 94.12.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai