Enable Javscript for better performance
அம்மா திட்ட முகாம் மக்கள் நலனுக்காக நடத்தப்படுகிறது: அமைச்சர்- Dinamani

சுடச்சுட

    

    அம்மா திட்ட முகாம் மக்கள் நலனுக்காக நடத்தப்படுகிறது: அமைச்சர்

    By திண்டுக்கல்  |   Published on : 25th May 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொதுமக்களின் வருவாய்த்துறை தொடர்பான மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில், அம்மா திட்ட முகாம் நடத்தப்படுவதாக மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்தார்.

    திண்டுக்கல் மாவட்டம், அடியனூத்து ஊராட்சிக்குள்பட்ட, வாழைக்காய்ப்பட்டி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற முகாமில், மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டபின், அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேசியது:

    மக்கள் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்கள் அரசைத் தேடிச் செல்லும் நிலையிலிருந்து, மக்களைத் தேடி அரசு செல்லும் நிலையை, வருவாய்த் துறையின் மூலம் அம்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் வழங்கப்படும் மனுக்கள் சிலவற்றுக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கான காரணங்கள் மற்றும் வழிமுறைகளை மாவட்ட அலுவலர்கள் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றார் அவர்.

    பிற்பகல் வரை நடைபெற்ற முகாமில், 260 மனுக்கள் வழங்கப்பட்டது. இதில் குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், நிரந்தர சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்ற உடனடி தீர்வு காணும் மனுக்களுக்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    முகாமில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மு.ச.பாண்டியராஜன், திண்டுக்கல் கோட்டாட்சியர் ஆர்.ஜே.உத்தமன், நத்தம் தொகுதி செயலர் ஆர்.வி.என்.கண்ணன், தனித்துனை ஆட்சியர் (சிறப்பு திட்ட செயலாக்க பிரிவு) சேதுராமன், ஆவின் தலைவர் எ.திவான் பட்சா, அடியனூத்து ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா ஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai