Enable Javscript for better performance
ஒட்டன்சத்திரம் அக்ஷயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரம் அக்ஷயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

    By ஒட்டன்சத்திரம்,  |   Published on : 25th May 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒட்டன்சத்திரம் அக்ஷயா பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைத்துள்ளது.

    ஒட்டன்சத்திரம் அக்ஷயா பள்ளியில் 60 பேர் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். அதில் கே.ஏ.ரவிசங்கரன் என்ற மாணவர் 491 மதிப்பெண்களும்,டி.லாவண்யா என்ற மாணவி 491 மதிப்பெண்களும் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தனர். அதில் கே.ஏ.ரவிசங்கரன் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு.தமிழ்-97,ஆங்கிலம்-95,கணிதம்-100,அறிவியல்-99,சமூக அறிவியல்-100 மொத்தம் 491.டி.லாவண்யா பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு,தமிழ்-98,ஆங்கிலம்-98.கணிதம்-100,அறிவியல்-98,சமுக அறிவியல்-97 மொத்தம் 491. அதே போல எஸ்.சுபாஷ் என்ற மாணவர் 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ஆம் இடம் பிடித்தார். ஆர்.ரேவதி என்ற மாணவியும்,இ.ராகுல்சிங் என்ற மாணவரும் 482 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3-ஆம் இடம் பிடித்தனர். இப்பள்ளியில் அறிவியல் பாடத்தில் 8 மாணவர்களும்,சமூக அறிவியல் பாடத்தில் 3 மாணவர்களும்,கணிதத்தில் 2 மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். 490 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவர்களும்,480 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவர்களும், 470 மதிப்பெண்களுக்கு மேல் 8 மாணவர்களும் பெற்றனர்.

    தேர்வு எழுதிய 60 மாணவர்களில் 25 மாணவர்கள் 450க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். அவர்களை பள்ளி சேர்மன் புருஷோத்தமன், சுந்தரம்மாள் புருஷோத்தமன், செயலர் பட்டாபிராமன், அறங்காவலர் சாமிநாதன், முதல்வர் இன்னாசிமுத்து, தலைமையாசிரியை ராஜேஸ்வரி மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டி இனிப்பு வழங்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai