Enable Javscript for better performance
கொடைக்கானலில் வாத்துப் பிடிக்கும் போட்டியில் வாத்து வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் வாத்துப் பிடிக்கும் போட்டியில் வாத்து வெற்றி

    By கொடைக்கானல்,  |   Published on : 25th May 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் படகு குழாம் சார்பில் படகுப் போட்டிகள் நடைபெற்றது. வாத்துப் பிடிக்கும் போட்டியில் வாத்தை வீரர்கள் பிடிக்க முடியாததால் வாத்து வெற்றி பெற்றது. கோடை விழாவை முன்னிட்டு கொடைக்கானல் படகு குழாம் சார்பில் 124-ஆவது படகுப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. போட்டியை கடலோர காவல்படை துணைத் தலைவர் டாக்டர் சி.சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் தட்டைப்படகு, துடுப்பு படகு, பெடல்படகு உள்ளிட்டவைகளில் போட்டிகள் நடைபெற்றது. இப் போட்டியில் தமிழகம் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். முக்கியமாக கடலோர காவல்படை வீரர்களும் இப் போட்டிகளில் பங்கு பெற்றனர். ஏழு பிரிவுகளில் இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் மிந்தமி முதலிடமும், தங்கம் இரண்டாமிடமும், சவா மூன்றாமிடமும் பெற்றனர்.

    வாத்து பிடிக்கும் போட்டி: போட்டிகளில் முக்கியப் போட்டியாக வாத்துப் பிடிக்கும் போட்டி நடைபெற்றது. இப் போட்டிகளில் 10-படகுகளில் 35-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். 15-நிமிடம் நடைபெற்ற வாத்துப் பிடிக்கும் போட்டியில் வாத்தை எந்த வீரர்களும் பிடிக்க முடியாததால் வாத்து வெற்றி பெற்றதாக போட்டியை நடத்தும் குழுவினர் தெரிவித்தனர்.

    முன்னதாக கொடைக்கானல் படகு குழாம் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திர துரைராஜா தேசியக் கொடி ஏற்றினார். விழாவில் படகு குழாம் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படகுப் போட்டியை, ஏரியின் இருபுறமும் நின்று சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.

    போட்டியானது ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai