Enable Javscript for better performance
நத்தத்தில் நான்கு நாள்கள் ஜமாபந்தி- Dinamani

சுடச்சுட

    

    நத்தம் தாலுகா பகுதிகளுக்கு நான்கு நாள்கள் ஜமாபந்தி நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஜமாபந்தி வருகிற 27ஆம் தேதி தொடங்குகிறது. அன்று முளையூர், புன்னப்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, இடையபட்டி, சாத்தம்பாடி, லிங்கவாடி ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து 28ஆம் தேதி அன்று புதூர், ரெட்டியபட்டி, சிரங்காட்டுப்பட்டி, சேத்துதூர், சிறுகுடி, கோட்டையூர் ஆகிய ஊராட்சிகளுக்கும், 29ஆம் தேதி பிள்ளையார்நத்தம், குடகிபட்டி, செந்துறை, சமுத்திராபட்டி, ஊராளிபட்டி, பூதகுடி ஆகிய ஊராட்சிகளுக்கும், நான்காம் நாள் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பண்ணுவார்பட்டி, பாலப்பநாயக்கன்பட்டி, பாப்பாபட்டி, ஆவிச்சிபட்டி, பன்னியாமலை, நடுமண்டலம், வேலம்பட்டி மற்றும் நத்தம் ஆகிய ஊராட்சிகளுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் இப் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் தங்களது நில உடைமை குறித்த பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நத்தம் தாசில்தார் நாராயணன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai