Enable Javscript for better performance
பட்டிவீரன்பட்டி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை- Dinamani

சுடச்சுட

    

    பட்டிவீரன்பட்டி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

    By வத்தலகுண்டு,  |   Published on : 25th May 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பட்டிவீரன்பட்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    பத்தாம் வகுப்பு தேர்வில் பட்டிவீரன்பட்டி நசுவிவி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர். இப்பள்ளி கடந்த 6 வருடமாக தொடர்ந்து நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணக்கு பாடத்தில் 12 பேரும், அறிவியல் பாடத்தில் 43 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 3 பேர் என 58 பேர் நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 400 மதிப்பெண்களுக்கு மேல் 82 மாணவர்கள் பெற்றுள்ளனர். 4 மாணவிகள் 494 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். முதல் இடத்தை பிடித்த மாணவிகள் காயத்ரி, பிரித்தா, பிரியதர்சனி, சமரிதலெட்சுமி ஆகியோருக்கு நாடார் உறவின்முறை சங்கத்தலைவர் அசோக்பாபு வெற்றிக்கோப்பை வழங்கினார். சங்க செயலர் தீனதயாளமூர்த்தி, மெட்ரிக் பள்ளி தலைவர் நிர்மல், பள்ளி செயலர் கோபிநாத் ஆகியோர் பாராட்டினர். பள்ளி முதல்வர் ஆத்தியப்பன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai