Enable Javscript for better performance
பழநி பள்ளி மாவட்ட அளவில் 3ஆம் இடம்- Dinamani

சுடச்சுட

    

    10ஆம் வகுப்பு தேர்வில் பழநி செயின்ட் பீட்டர் பள்ளி மாவட்ட அளவில் 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

    10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் பழநி செயின்ட் பீட்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சிந்தியா 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இம்மாணவி பெற்ற மதிப்பெண்கள், தமிழ்-98, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல்-100, சமூகஅறிவியல்-100. இப்பள்ளி மாணவி தனநந்திதா 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2ஆம் இடம் பிடித்துள்ளார். இப்பள்ளி மாணவி சுவேதா 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 3ஆம் இடம் பிடித்தார். இப்பள்ளியில் கணிதத்தில் 2 பேரும், அறிவியலில் 4 பேரும், சமூகஅறிவியலில் 3 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை பள்ளியின் அறக்கட்டளை நிர்வாகிகள், தாளாளர், முதல்வர், ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai