Enable Javscript for better performance
பாரத் வித்யா பவன் பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பழநி பாரத் வித்யா பவன் பள்ளி 10ஆம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

    தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பழநி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவன் செல்வபிரகாஷ் 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். மாணவர் முகமது அசாருதீன், மாணவி பிரியதர்ஷிணி ஆகியோர் 493 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடம் பிடித்தனர். மாணவிகள் அறிவுமலர், இலக்கியா, தஸ்னீம் ஆகியோர் 492 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடம் பிடித்தனர்.

    இப்பள்ளியில் கணிதத்தில் 5 பேரும், அறிவியலில் 25 பேரும், சமூகஅறிவியலில் 5 பேரும் 35 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 66 மாணவ, மாணவியர் 400க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை பள்ளியின் நிர்வாகிகள், முதல்வர் ஆசிரியைகள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai