Enable Javscript for better performance
மாநில அளவில் 3ம் இடம் பிடித்து பழனி தேவி மெட்ரிக். பள்ளி சாதனை- Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவில் 3ம் இடம் பிடித்து பழனி தேவி மெட்ரிக். பள்ளி சாதனை

    By பழனி,  |   Published on : 25th May 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பழனி தேவி மெட்ரிக். பள்ளி மாநில அளவில் 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

    பழனி தேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் என்.ஆர்.சுதன் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3ஆம் இடம் பிடித்தார். பாடவாரியாக இம் மாணவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூகஅறிவியல்-100. இப் பள்ளி மாணவி சுருதி 496 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்ட அளவில் 3ஆம் இடம் பிடித்துள்ளார். இம்மாணவி பெற்ற மதிப்பெண்கள்- தமிழ்-98, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல்-100, சமூகஅறிவியல்-100. இப் பள்ளி மாணவர் ஆதிசங்கரசேகர் 493 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இப் பள்ளியில் 22 மாணவர்கள் 480 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். 37 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். கணிதத்தில் 10 பேரும், அறிவியலில் 12 பேரும், சமூக அறிவியலில் 5 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் ஞானம், முதல்வர் திலகவதி உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai