Enable Javscript for better performance
மூதாட்டி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே சாமிநாதபுரம், ஜிவிஜி நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி (80). தனது மகள் நித்யானந்தம் வீட்டின் பின்புறம் தனியாக வசித்து வந்தார். சரஸ்வதியின் 2 கால்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், கால் வலி தீரவில்லை. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இதனால் மனமுடைந்த சரஸ்வதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்ட நித்யானந்தம், ஓடிச்சென்று பார்த்தபோது, சரஸ்வதியின் உடலில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சரஸ்வதி சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். சாமிநாதபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai