Enable Javscript for better performance
வித்யாபார்த்தி பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பத்தாம் வகுப்பு தேர்வில் 98.16 சதவீத தேர்ச்சிப் பெற்ற திண்டுக்கல் வித்யாபார்த்தி மேல்நிலைப் பள்ளி திண்டுக்கல் கல்வி மாவட்ட அளவில் சுயநிதி பள்ளிகள் பிரிவில் 2ஆம் இடம் பெற்றுள்ளது.

    இந்த பள்ளியின் சார்பில் 381 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் மாணவி எம்.நிரஞ்சனா 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடமும், 488 மதிப்பெண்கள் பெற்ற ஆர்.ராம்குமார் 2-ஆவது இடமும், 487 மதிப்பெண்கள் பெற்ற மாணவி எஸ்.அட்சயா மற்றும் வி.ஜி.சந்தியா ஷாமிலி ஆகியோர் 3ஆவது இடமும் பெற்றுள்ளனர்.

    மேலும் 480க்கு மேல் 12 பேரும், 470க்கு மேல் 43 பேரும், 460க்கு மேல் 72 பேரும், 450க்கு மேல் 98 பேரும், 400க்கு மேல் 206 பேரும் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

    இரண்டு பாடங்களில் முழு மதிப்பெண் பெற்று 5 பேரும், கணிதப் பாடத்தில் 3 பேரும், அறிவியல் பாடத்தில் 28 பேரும், சமூக அறிவியலில் 10 பேரும் முழு மதிப்பெண் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

    தமிழ்பாடத்தில் மாணவி எம். நிரஞ்சனா மற்றும் சி.வினோஜினி ஆகியோர் 98 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் கே.கிஷோர் பிரியதர்ஷன் மற்றும் எம்.ஸ்ரீமதி ஆகியோர் 98 மதிப்பெண்களும் பெற்று சாதனை புரிந்துள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கும், அதற்கு துணை நின்ற ஆசிரியர்களுக்கும் பள்ளி தாளாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி பாராட்டுத் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai