Enable Javscript for better performance
அபிராமி அம்மன் கோயில் ராஜகோபுர பணிகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அபிராமி அம்மன் கோயில் ராஜகோபுர பணிகள் தொடக்கம்

    By திண்டுக்கல்,  |   Published on : 26th May 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோயிலுக்கான ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் சிறப்பு பூஜைகளுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

    திண்டுக்கல் அருள்மிகு ஞானாம்பிகை உடனமர் காளஹஸ்தீஸ்வரர் மற்றும் அபிராமி அம்மன் உடனமர் பத்மகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி, கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்த நிலையில் திருக்கோயிலுக்கான ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை(மே 25) தொடங்கப்பட்டன.

    52 அடியில் அமைக்கப்பட உள்ள ராஜகோபுரத்திற்கு 16 அடி உயரம் கொண்ட 2 நிலைக்கால் நாட்டும் பணி, காலை 8 மணிக்கு துவங்கியது. 5 டன் எடை கொண்ட ஒவ்வொரு தூணிலும், சிற்ப வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலைக்கால்களின் மீது சிவாச்சாரியார்கள் புனித நீர் மற்றும் பால் ஊற்றி, சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அபிஷேக, ஆராதனைக்கு பின் நிலைக்கால் ஊன்றும் பணி நடைபெற்றன. நிகழ்ச்சியில் மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் எம்.உதயகுமார், திருப்பணிக்குழுத் தலைவர் வேலுச்சாமி, முன்னாள் எம்.பி. சீனிவாசன், வர்த்தக சங்கத் தலைவர் எஸ்கேசி.குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai