Enable Javscript for better performance
இலவச துணிப்பைகள் வழங்கும் பணி- Dinamani

சுடச்சுட

    

    பழனி நகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் கொடைக்கானல் மலைக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் வனப் பகுதிக்குள் தாங்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பைகளை போட்டு விடுகின்றனர். இதனை தடுக்கும் நோக்கத்துடன் பழனி விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சியின் போது இலவசமாக துணிப்பைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை இலவசமாக துணிப்பைகள் வழங்கும் பணி தேக்கன்தோட்டம் வனத் துறை சோதனைச்சாவடி அருகே நடைபெற்றது. இப் பணியில் விவேகானந்தா சேவா டிரஸ்ட், பழனி வனச்சரகம், தமிழ் தேசிய மனிதநேய அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து ஈடுபட்டன. பயணிகளிடமிருந்த பிளாஸ்டிக் பைகளை பெற்றுக் கொண்டு அதற்குப் பதிலாக ஆயிரம் துணிப்பைகள் வழங்கப்பட்டன. வனத்தைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

    இந் நிகழ்ச்சியினை பழனி வனச்சரகர் கணேசன் தொடங்கி வைத்தார். வனவர் தாருகாவனன், தமிழ் தேசிய மனிதநேய அறக்கட்டளை நிர்வாகி தமிழ்மாறன், ஜார்ஜ், சந்தானம், மூர்த்தி, ஜெரால்டு மற்றும் விவேகானந்தா சேவா டிரஸ்ட் பலரும் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai