Enable Javscript for better performance
கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் பிஎன்சி தர்மசாஸ்தா அறக்கட்டளை தலைவர் டி.கே.லோகநாதன் தெரிவித்துள்ளது: தர்ம சாஸ்தா அறக்கட்டளை சார்பில் கடந்த 18 ஆண்டுகளாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசதியற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் நிகழாண்டிலும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

    உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், தங்கள் பெயர், மதிப்பெண் பட்டியல், முகவரி, தொலைபேசி எண், பெற்றோரின் பணி விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பங்களை எஸ்.ஜெயசந்திரன், ஒருங்கிணைப்பாளர், பி.என்.சி தர்ம சாஸ்தா அறக்கட்டளை, 40 நேருஜி நகர், திண்டுக்கல் என்ற முகவரிக்கு ஜூன் 10ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai