Enable Javscript for better performance
குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கொலை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    திண்டுக்கல் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ம.சங்கர்(27). இவர் மீது திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் கொலை, வழிப்பறி மற்றும் பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.ஜெயசந்திரன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம், அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai