Enable Javscript for better performance
சேரன் வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் அடுத்துள்ள சின்னாளப்பட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக். பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    இந்த பள்ளியிலிருந்து தேர்வு எழுதிய 90 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத இலக்கை அடைந்துள்ளனர். இதில் 47 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

    491 மதிப்பெண்கள் பெற்று மாணவர் எஸ்.ஸ்ரீஹரி பள்ளி அளவில் முதலிடமும், 489 மதிப்பெண்கள் பெற்ற மாணவி தாஜீஸ் ரினி 2ஆம் இடமும், 487 மதிப்பெண் பெற்ற எம்எஸ்.பொன்குமார் 3ஆவது இடமும் பெற்றுள்ளனர்.

    மேலும் கணித மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் தலா 5 பேர், அறிவியல் பாடத்தில் 20 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியை திலகம் மற்றும் சேரன் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai