Enable Javscript for better performance
நத்தத்தில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்ச- Dinamani

சுடச்சுட

    

    நத்தத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மதீனா பள்ளி வளாகத்தில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    நத்தம் கிளைச் செயலர் சிக்கந்தர் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலர் மைதீன், மாணவரணி நத்தம் கிளைத் தலைவர் ஜகுபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புளூ ஸ்டார் பள்ளி தலைமையாசிரியர் அஸ்ரப், மாநில மாணவரணி நிர்வாகி முகமது ரியாஸ் ஆகியோர் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த பிறகு மேற்படிப்பு கல்வியை தொடருவது குறித்து எடுத்துரைத்தனர். மாணவர், பெற்றோரின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர். முஸ்லிம் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai