Enable Javscript for better performance
பழனி மலைக்கோயிலில் குவிந்த பக்தர்கள் - Dinamani

சுடச்சுட

    

    பழனியில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

    பழனி மலைக்கோயிலில் தொடர்விடுமுறை, முகூர்த்தத்தை முன்னிட்டு அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். படிவழியில் ஏராளமான பக்தர்கள் சென்ற நிலையில் மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் விஞ்ச், ரோப்கார் நிலையங்களில் சுமார் மூன்று மணிநேரம் டிக்கெட் பெற பக்தர்கள் காத்திருந்தனர். தவிர, மலைக் கோயிலில் கட்டண, இலவச தரிசன வரிசைகளில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்கோயிலில் அதிகாலை சன்னதி திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடத்தப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மலைக்கோயிலில் உள்ள போகர் சன்னதியிலும் சிறப்பு அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அடிவாரம், சன்னதி வீதிகளிலும் தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திர, கர்நாடக மற்றும் கேரள பக்தர்கள் நிறைந்திருந்தனர். இரவு நடைபெற்ற தங்கரத புறப்பாட்டிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சின்னக்குமாரரை தரிசித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai