Enable Javscript for better performance
புதிய சிந்தனையை வெளிப்படுத்த தொடர்பு மொழி தேவை- Dinamani

சுடச்சுட

    

    புதிய சிந்தனையை வெளிப்படுத்த தொடர்பு மொழி தேவை

    By திண்டுக்கல்,  |   Published on : 26th May 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நம்முடைய புதிய சிந்தனைகளை, தாய் மண்ணிற்கு வெளியே எடுத்துச் செல்வதற்கு தொடர்பு மொழியான ஆங்கிலம் அவசியம் என பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் தெரிவிக்கப்பட்டது.

    திண்டுக்கல் ஸ்ரீரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில் முதன்முறையாக ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. மே 13ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்ற முகாமில், கிராமப்புற மாணவர்களின் ஆங்கிலத்திறனை மேம்படுத்தும் வகையில் 50 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    பயிற்சி முகாமின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கே.மணிவண்ணன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியது:

    உலகில் அதிகமானோர் பேசும் ஆங்கில மொழியில் புலமை பெற்றால், வாழ்வதாரத்துக்கான பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். சிந்தனை மற்றும் செயலாற்றலை வளர்ப்பது தாய்மொழி என்பதில் மாற்று கருத்தில்லை. அதே நேரம் புதிய சிந்தனை மற்றும் உருவாக்கத்தை, தாய் மண்ணுக்கு வெளியே எடுத்துச் செல்ல பிறமொழியின் தொடர்பாற்றல் தேவைப்படுகிறது. அதற்கான முக்கிய பங்கு ஆங்கில மொழிக்கு உள்ளது என்றார் அவர்.

    சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆங்கில மொழி பயிற்சியாளர் ஆர்.சந்திரசேகர், பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். முன்னதாக அவர் பேசியது: ஆங்கில மொழி தொடர்பாற்றல் குறித்து கவலைப்படுவதை நிறுத்திக் கொண்டு, முதலில் அதற்கான பயிற்சியை பெற வேண்டும். தயக்கமின்றி முயற்சித்தால், அதற்கான பலனை விரைவில் பெற முடியும். இன்றைய சூழலில் ஆங்கில மொழியின் தேவை, அதன்மூலம் கிடைக்கும் பலனை நினைத்து செயலாற்ற வேண்டும் என்றார்.

    பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளரும், கல்லூரியின் ஆங்கிலத்துறை விரிவுரையாளருமான ஏ.மரிய சித்ரா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai