Enable Javscript for better performance
வத்தலகுண்டு மகாபரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வத்தலகுண்டு மகாபரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம்

    By வத்தலகுண்டு,  |   Published on : 26th May 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு மகா பரமேஸ்வரி அம்மன் கோயில் திருத்தேர் உலா நடைபெற்றது.

    மகா பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகிறது. தேர்பவனி விழாவை முன்னிட்டு தேர் சங்கிலி பூட்டப்பட்டு அம்மன் விக்ரகம் தேரில் அமர்த்தப்பட்டது. பின்பு அனைத்து சமுதாய மக்களும் ஒன்று திரள திருத்தேருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் விராலிப்பட்டி ரோடு மற்றும் பிள்ளைமார் தெரு வழியாக நிலையை வந்தடைந்தது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு வத்தலகுண்டு காவல்நிலைய ஆய்வாளர் வினோஜி தலைமையில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் (விளாம்பட்டி), சார்பு ஆய்வாளர்கள் ஆனந்தி, முத்தமிழ்செல்வி, நாகராஜன், சவுந்திரராஜன், காமாட்சி மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai