Enable Javscript for better performance
அரசு ஓவியத் தேர்வு எழுதுவோருக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    அரசு ஓவியத் தேர்வில் பங்கேற்போருக்கு திண்டுக்கல் அருள்ஜோதி வள்ளலார் மேல்நிலைப் பள்ளியில் திறனாய்வுத் தேர்வு நடைபெற்றது.

    திறனாய்வு பயிற்சிக்கு பின், வரையற்ற ஓவியம் மற்றும் மாதிரி அமைத்தல், மேல்நிலை கீழ்நிலை வுட்கர்விங் டிசைன் எனப்படும் செதுக்கு சித்திரம், இன்டீரியர் டெக்கரேசன் என்ற உள்அறை அலங்காரம், பேப்ரிக்ஸ் டிசைன் எனப்படும் துணிகளில் வடிவமைத்தல் மற்றும் வர்ணம் தீட்டுதல் ஆகியவற்றில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் தேர்வுகளும் நடத்தப்பட்டன.

    அதன்பின்னர் விடைத்தாள்கள் திறனாய்வு செய்யப்பட்டு, அதில் உள்ள குறைகளை திருத்துவதற்கான வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டன. பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், ஓவிய ஆசிரியருமான நல்ல காசிராஜன், தேர்வுக்கு பின் தெரிவித்தது:

    தேர்வு எழுதுவோரை ஊக்கப்படுத்தும் விதமாக, பல நிறுவனங்கள் திறனாய்வுத் தேர்வு நடத்துகின்றன. இதன் மூலம் தேர்வர்கள் விழிப்புணர்வு பெற வாய்ப்புள்ளது. அந்த வகையில் ஓவியத் தேர்வு எழுதச் செல்வோருக்கும் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. அவர்களுடைய குறைகள் தற்போது சுட்டிக் காட்டப்பட்டுள்ளதால், அரசுத் தேர்வில் அதனை தவிர்க்க முடியும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai