Enable Javscript for better performance
ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

    By ஒட்டன்சத்திரம்  |   Published on : 27th May 2014 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 124 பேர் தேர்வு எழுதினர். அதில் டி.பிளசி என்ற மாணவி 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு. தமிழ்-98, ஆங்கிலம்-98, கணிதம்-99, அறிவியல்-100, சமூக அறிவியல்-99, மொத்தம் 494. அதே போல கே.விஜயசங்கர், எம்.ரேணுகா, எஸ்.சரண்யா ஆகியோர் 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ஆம் இடம் பிடித்தனர். ஏ.அருணாதேவி, இ.பவித்ராபவானி ஆகியோர் 491 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3-ஆம் இடம் பிடித்தனர்.

    மேலும் 490 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 23 பேரும், 470 மதிப்பெண்களுக்கு மேல் 15 பேரும், 460 மதிப்பெண்களுக்கு மேல் 12 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 12 பேரும் பெற்றனர். கணிதப்பாடத்தில் 8 பேரும், அறிவியல் பாடத்தில் 29 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 22 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். அவர்களை பள்ளி செயலர் ஜேக்கப்தாமஸ், பள்ளி முதல்வர் ஸ்டீபன் மற்றும் வகுப்பு ஆசிரிய, ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai