Enable Javscript for better performance
கல்வி உதவித் தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    கல்வி உதவித் தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

    By திண்டுக்கல்  |   Published on : 27th May 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வசதியற்ற மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற ஜூன் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திண்டுக்கல் பிஎன்சி தர்மசாஸ்தா அறக்கட்டளை தலைவர் டி.கே.லோகநாதன் தெரிவித்துள்ளது:

    தர்ம சாஸ்தா அறக்கட்டளை சார்பில் கடந்த 18 ஆண்டுகளாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசதியற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் நிகழாண்டிலும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், தங்கள் பெயர், மதிப்பெண் பட்டியல், முகவரி, தொலைபேசி எண், பெற்றோரின் பணி விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    விண்ணப்பங்களை எஸ்.ஜெயசந்திரன், ஒருங்கிணைப்பாளர், பி.என்.சி தர்ம சாஸ்தா அறக்கட்டளை, 40 நேருஜி நகர், திண்டுக்கல் என்ற முகவரிக்கு ஜூன் 10ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai