Enable Javscript for better performance
கொடைக்கானல் படகுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் படகுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

    By கொடைக்கானல்  |   Published on : 27th May 2014 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் படகுப் போட்டியும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.

    கோடை விழாவை முன்னிட்டு கொடைக்கானல் படகு குழாம் சார்பில் 124-ஆம் ஆண்டு படகுப் போட்டி கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது.

    போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பாரத் பாபு முதலிடமும், தமின் இரண்டாவது இடமும், தன்வீர் மூன்றாமிடமும் பெற்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஆதித்யா-தேவா முதலிடமும், தமிம்-தன்வீர் இரண்டாவது இடமும், பைசன்-பயாஸ் மூன்றாமிடமும் பெற்றனர்.

    கலப்பு இரட்டையர் சீனியர் பிரவில் அர்விந்-மிந்தமி முதலிடமும், தன்வீர்-சபா, இரண்டாமிடமும், தமீம்-தங்கம் மூன்றாமிடமும் பெற்றனர். பெண்கள் இரட்டையர் பிரிவில் மிந்தமி-தங்கம் முதலிடமும், சுல்தான் நசீர்-சபா இரண்டாமிடமும் பெற்றனர்.

    ஜூனியர் சிறுவர் ஒற்றையர் பிரிவில் அஸ்லம் முதலிடமும், அர்மன் இரண்டாமிடமும், அப்ரான் மூன்றாமிடமும் பெற்றனர். ஜூனியர் சிறுமியர் இரட்டையர் பிரிவில் லீனா பாத்திமா-இனியா சுதா முதலிடமும், ருகி-ரித்திகா இரண்டாமிடமும் பெற்றனர். 10-வயதுக்குள்பட்ட போட்டியில் யுவன் முதலிடமும், கிரன் இரண்டாமிடமும், சுதர்சன் மூன்றாமிடமும் பெற்றனர்.

    தட்டைப்படகுப் போட்டியில் இர்பான்-கேபா-பிரியங்கா, தங்கம் அணியினர் முதலிடமும், பால்ஜெப், ஜெபா, சபா, மிந்தமி அணியினர் இரண்டாமிடமும்,ரியாஷ், பயாஸ், இனியா, சாரிகா அணியினர் மூன்றாமிடமும் பெற்றனர்.

    முதியோர்களுக்கான நடைபெற்ற படகுப் போட்டியில் ராஜலிங்கம் முதலிடமும், ரவிச்சந்திரன் இரண்டாமிடமும், ராமசுப்புராயுலு மூன்றாமிடமும் பெற்றனர். படகு ஓட்டுனர்களுக்கான போட்டியில் கார்த்திக்-சேகர் முதலிடமும், சரவணன்-பிரவீன், இரண்டாமிடமும், ஜான்-சுரேஷ் மூன்றாமிடமும் பெற்றனர்.

    வாத்துப் பிடிக்கும் போட்டியில் 50-பேர் பங்கு பெற்றனர் 15-நிமிடம் நடைபெற்ற வாத்து பிடிக்கும் போட்டியில் யாரும் வாத்தை பிடிக்க முடியாததால் வாத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    சப்-ஜூனியர் சாம்பியன் பிரிவில் நிதின்-லியாவும், சிறுவர் ஜூனியர் சாம்பியன் பிரிவில் அர்மனும், சிறுமியர் ஜூனியர் சாம்பியன் பிரிவில் சாரிகாவும், சீனியர் சாம்பியன் பிரிவில் ஆதித்யாவும், சீனியர் பெண்கள் பிரிவில் சாம்பியனாக மிந்தமியும் வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி படகு குழாம் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு மதுரை மண்டல ரயில்வே கோட்ட மேலாளர் ரஸ்தோகி தலைமை வகித்தார். டி.ஐ.ஜி.ரத்தோர் முன்னிலை வகித்தார்.

    படகுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கடலோர காவல்படை எஸ்.பி.கல்பனாநாயக் பரிசு வழங்கி பாராட்டி பேசினார். முன்னதாக படகு குழாம் சங்கத்தின் கௌரவத் தலைவர் ராமச்சந்திர துரை ராஜா வரவேற்றார்.

    சங்க செயலர் பவானி சங்கர் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai