Enable Javscript for better performance
சிறுகுடியில் கோயில் காளைகளுக்கு கருப்பு துணி கட்டி ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    சிறுகுடியில் கோயில் காளைகளுக்கு கருப்பு துணி கட்டி ஊர்வலம்

    By நத்தம்,  |   Published on : 27th May 2014 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி சிறுகுடியில் காளைகளின் கொம்புகளில் கருப்புக்கொடி கட்டி ஊர்வலம் நடத்தப்பட்டது.

    நத்தம் அருகே சிறுகுடி மற்றும் அதைச் சுற்றியுள்ள மஞ்சநாயக்கன்பட்டி, பூசாரிபட்டி, நல்லகண்டம், ஒடுகம்பட்டி, ஒதுனிப்பட்டி, நடுவனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டுக்காக கோயில் காளைகளை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததையடுத்து தடையை நீக்கக் கோரி சிறுகுடி பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகளில் கருப்புக் கொடி கட்டி மந்தைத் திடல் வழியாக ஊர்வலமாகச் சென்றனர். மேலும் சிறுகுடியில் உள்ள வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai