Enable Javscript for better performance
திருமலைக்கேணியில் பிரதோஷ விழா- Dinamani

சுடச்சுட

    

    நத்தம் அருகே உள்ள பிரசித்திபெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரதோஷ விழா நடந்தது.

    இதையொட்டி வெளி மாவட்டங்களில் இருந்தும், சுற்று வட்டாரங்களிலிருந்தும், ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து, விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, முருகப்பெருமானுக்கும், விநாயகருக்கும், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    நத்தம் கோவில்பட்டியிலுள்ள கைலாசநாதர் கோயிலிலும் பிரதோஷ விழா நடந்தது. நந்தி சிலைக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து கைலாசநாதர், செண்பகவள்ளியம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai