Enable Javscript for better performance
நிலக்கோட்டை குமரப்பா பள்ளி சாதனை - Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை குமரப்பா செட்டியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. தொடர்ந்து 10 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவர் விஷ்ணு 491 மதிப்பெண்களுடன் முதல் இடத்தையும், தர்ஷினி 490 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தையும், கார்த்திகேயன் 489 மதிப்பெண்களுடன் 3ஆவது இடத்தையும் பிடித்தனர். 10 மாணவர்கள் 485 மதிப்பெண்களும், 14 மாணவர்கள் 480 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் நிறுவனர் தலைவர் அழகம்மை, தாளாளர் திருநாவுக்கரசு, முதல்வர் ஜெய்சங்கர் மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai