Enable Javscript for better performance
பழனி வட்டத்தில் இன்றுமுதல் ஜமாபந்தி- Dinamani

சுடச்சுட

    

    பழனி வட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஜமாபந்தி நடைபெறும் நாள்கள் குறித்து வட்டாட்சியர் வரதராஜன் அறிவித்துள்ளார்.

    திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் கே.மனோகரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை(மே 27) முதல் ஜூன் 5ஆம் தேதி வரை 10 நாள்கள் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதுகுறித்து பழனி வட்டாட்சியர் வரதராஜன் தெரிவித்துள்ளது:

    மே 27ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) தொப்பம்பட்டி குறுவட்டம் மரிச்சிலம்பு, கீரனூர், தொப்பம்பட்டி, வேலம்பட்டி, புளியம்பட்டி, வில்வாதம்பட்டி, மொல்லம்பட்டி, மேட்டுப்பட்டி, வாகரை ஆகிய கிராமங்களில் நடைபெறும்.

    இரண்டாம் நாளில்(மே 28) தொப்பம்பட்டி குறுவட்டம், அக்கரைப்பட்டி, 54புதூர், தும்பலப்பட்டியிலும், ஆயக்குடி குறுவட்டம் மானூர், அமரபூண்டி, எரமநாயக்கன்பட்டி, மேலக்கோட்டை, வேப்பன்வலசு, கணக்கன்பட்டி, கோம்பைபட்டி, பச்சளநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெறும்.

    மே 29ஆம் தேதி ஆயக்குடி குறுவட்டத்தில் ஆயக்குடி(கிழக்கு மற்றும் மேற்கு), கோரிக்கடவு குறுவட்டம் புஷ்பத்தூர், கொழுமங்கொண்டான், மேல்கரைப்பட்டி, கோட்டத்துரை, மிடாப்பாடி கிராமங்களிலும் நடைபெறும்.

    4ஆவது நாளான மே 30ஆம் தேதி கோரிக்கடவு குறுவட்டத்தில் உள்ள முத்துநாயக்கன்பட்டி, கோரிக்கடவு, கோவிலம்மாபட்டி, ராஜாம்பட்டி, தாலையூத்து, பாப்பம்பட்டி குறுவட்டம் சித்தரேவு, காவலப்பட்டி ஆகிய கிராமங்களிலும், ஜூன் 3ஆம் தேதி பாப்பம்பட்டி குறுவட்டத்தில் அய்யம்பாளையம், வேலுசமுத்திரம், தாதநாயக்கன்பட்டி,(தெற்கு மற்றும் வடக்கு), வாடிபட்டி(வடக்கு மற்றும் தெற்கு), ரெட்டையம்பாடி, பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, சின்னம்பட்டி ஆகிய கிராமங்களிலும் நடைபெறும்.

    ஆறாம் நாளான ஜூன் 4ஆம் நெய்க்காரபட்டி குறுவட்டம் சின்னக்கலையம்புத்தூர், சித்திரைக்குளம், நெய்க்காரபட்டி, சுக்கமநாயக்கனள்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, இரவிமங்கலம், பெரியகலையம்புத்தூர், பெரியம்மாபட்டி, தாமரைக்குளம், அ.கலையம்புத்தூர் பகுதியலும், விருவீடு குறுவட்டத்தில் உள்ள சந்தையூர், ரெங்கப்பநாயக்கன்பட்டி, நடகோட்டை, குன்னுவாரன்கோட்டை, பண்ணப்பட்டி, விராலிபட்டி, விருவீடு ஆகிய கிராமங்களிலும் நடைபெறும்.

    இறுதி நாளான ஜூன் 5ஆம் தேதி பழனி குறுவட்டத்தில் உள்ள புதச்சு, பாலசமுத்திரம், சிவகிரிப்பட்டி, தட்டான்குளம், கலிக்கநாயக்கன்பட்டி, கோதைமங்கலம், அய்யம்புள்ளி, பழனி ஆகிய பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் ஜமாபந்தி நடைபெறும்.

    அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ஜமாபந்தியில் பங்கேற்று உடனடி தீர்வு பெற்று பயனடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai