Enable Javscript for better performance
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான இலவச ஆலோசனை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான இலவச ஆலோசனை முகாம்

    By பழனி  |   Published on : 27th May 2014 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி திருநகர் அவார்டு தையல் பயிற்சி மையத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான இலவச ஆலோசனை மற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    பழனி சேரன்ஜீவா நகரில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி அவார்டு அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சிறப்பு கல்வியுடன் முடநீக்கவியல் பயிற்சி மற்றும் பேச்சுப்பயிற்சி வழங்கப்படுகிறது.

    இப்பள்ளியில் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை முகாம் மற்றும் சிறப்பு ஆலோசனை முகாம் அவார்டு தையல் பயிற்சி பள்ளியில் நடைபெற்றது.

    முகாமிற்கு அரிமா மாவட்ட தலைவர் மயில்சாமி தலைமை வகித்தார். அவார்டு டிரஸ்ட் நிர்வாகி பெலிக்ஸ் வில்சன் பிரான்சிஸ் வரவேற்புரை வழங்கினார். நெய்க்காரபட்டி அரிமா நிர்வாகி கந்தசாமி, அகிலிகா ஹெர்பல்ஸ் மாதா குருஜி, எர்ஆர்எப் சிவசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர மாற்றுத்திறனாளிகள் சங்க செயலர் பகத்சிங் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முகாமில் பங்கேற்ற குழந்தைகளுக்கு முடநீக்கவியல் பயிற்சியாளர் மேரி மற்றும் பேச்சுப்பயிற்சியாளர் பூங்குழலி ஆகியோர் இலவச ஆலோசனைகள் வழங்கினர். முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, உதவித் தொகை, உதவி உபகரணங்கள், இலவச பேருந்து மற்றும் ரயில் சேவைக்கான அடையாள அட்டை ஆகியவை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai