Enable Javscript for better performance
மாணவி கடத்தல்:தந்தை, மகன் மீது புகார்- Dinamani

சுடச்சுட

    

    கல்லூரி மாணவியை, தந்தையுடன் சேர்ந்து கல்லூரி மாணவர் கடத்திச் சென்றுவிட்டதாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பழனி அடுத்துள்ள கோதைமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன். இவரது 19 வயது மகள் பழனியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு, வீட்டின் அருகில் உள்ள பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார்.

    அதன் பின்னர் வீடு திரும்பவில்லையாம். இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், தனது மகன் கார்த்திக்குடன் சேர்ந்து மாணவியை கடத்திச் சென்ற தகவல் தெரியவந்துள்ளது. கார்த்திக் பழனியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சின்னப்பன் அளித்த புகாரின் பேரில், பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai