Enable Javscript for better performance
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை

    By திண்டுக்கல்  |   Published on : 27th May 2014 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில அரசில் வழங்குவதுபோல், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் திண்டுக்கல் நகரம் மற்றும் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டச் செயலர் எல்.மதிவாணன், தலைவர் பி.தர்மராஜ், பொருளாளர் பி.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநகரம் மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    மாநில அளவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு மத்திய அரசிலும் அமல்படுத்த வேண்டும். எம்பிசி பிரிவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக உயர்கல்வி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

    நத்தம், மே 26:குடும்பத் தகராறில் கூலித்தொழிலாளி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    நத்தம் அருகே சீரங்கம்பட்டியைச் சேர்ந்தவர் சக்தி(25). கூலித்தொழிலாளி ஆவார். இவரது மனைவி அழகு(22). இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டதையடுத்து சக்தி விஷத்தை குடித்துவிட்டாராம். ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai