Enable Javscript for better performance
ராஜபட்சவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இலங்கை அதிபர் ராஜபட்சவின் தில்லி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் நகரில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

    பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் விழாவுக்கு, சிறப்பு விருந்தினராக பங்கேற்க புதுதில்லி வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தின் பல இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அதன்படி திண்டுக்கல் நகரில் காந்திய மக்கள் கட்சி, வழக்குரைஞர்கள் சங்கம், அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய அமைப்புகள் சார்பில் தனித்தனியே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காந்திய மக்கள் கட்சி சார்பில், நாகல்நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலர் எம்.பிரான்சிஸ் தலைமை வகித்தார். இதில் மாவட்டத் தலைவர் ஏ.முனியசாமி, துணைத்தலைவர் சி.சிவக்குமார், பொருளாளர் கே.சுப்பையா உள்பட 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்ட நீதிமன்ற வளாக நுழைவு வாயிலில், மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai