Enable Javscript for better performance
கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    வேலை செய்த போது கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி, சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

     திண்டுக்கல் மாவட்டம், சிலுவத்தூர் அடுத்துள்ள காம்பார்பட்டியைச் சேர்ந்தவர் கு.அய்யப்பன்(39). கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.  சாணார்பட்டி அடுத்துள்ள பாலகவுண்டன்பட்டியைச் சேர்ந்த கண்ணையா வீட்டில், கடந்த சில நாள்களாக வேலை செய்துள்ளார்.

     கடந்த வியாழக்கிழமை சிமெண்ட் மூடை தூக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தவறி விழுந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

     இதுகுறித்து சாணார்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai