Enable Javscript for better performance
கலந்தாய்வு: ஆசிரியர்கள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு உரிய நடவடிக்கையை உடனே எடுத்திட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

        இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.எஸ்.ஆர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி மாவட்ட செயலாளர் குன்னுவர் சோசுவா கூறியதாவது:

        ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில், ஆசிரியர் கலந்தாய்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டு, ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும். மே மாத விடுமுறையில் கலந்தாய்வு நடத்தப்படும். இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஏப்ரல் மாதத்தில் நடைமுறையில் இருந்தது. இதனால் எந்த அரசாணையும் வெளியிடப்படவில்லை. தற்போது தேர்தல் விதிமுறைகள் முடிவுக்கு வந்துள்ளது. ஆனாலும் இன்னும் கலந்தாய்வு பற்றி முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுபற்றி ஜே.எஸ்.ஆர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு உரிய நடவடிக்கையை உடனே எடுத்திட வேண்டும் என்றும் அதோடு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு சென்ற ஆண்டு வழங்கப்படவில்லை. இரட்டை பட்ட வழக்கை காரணம் காட்டி பதவி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது. வழக்கு சம்பந்தப்படாத ஒன்றியங்களில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிடவும் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளதாக குன்னுவர் சோசுவா தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai