Enable Javscript for better performance
குறிஞ்சி ஆண்டவருக்கு மலர் அலங்கார வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் அருள்மிகு ஸ்ரீ குறிஞ்சி ஆண்டவருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான கொடைக்கானலிலுள்ள அருள்மிகு குறிஞ்சியாண்டவர் திருக்கோயிலில் மலர் வழிபாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளையக் கூடிய மலர்களான ரோஜா, கொய்மலர்கள், ஜெர்பரா, பேன்சி, சில்வேனியா மற்றும் ஆயிரக்கணக்காண மலர்களைக் கொண்டு முருகனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. மலர் வழிபாடு நிகழ்ச்சியில் முருகனுக்கு தங்கக் கவசம் அளிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு குறிஞ்சிமலை குமரனை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai