Enable Javscript for better performance
கொடைக்கானலில் பாராகிளைடிங் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    கொடைக் கானலில் கோடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற பாராகிளைடிங் பயிற்சியில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    கோவையில் உள்ள இந்திய வான் விளையாட்டு மற்றும் அறிவியல் மையம் சார்பில் கொடைக்கானலில் நடைபெற்று வரும் கோடை விழாவில் பங்கேற்றுள்ள சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் முதன் முதலாக பாராகிளைடிங் பயிற்சி மூஞ்சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

     பாராசூட்டில் பறந்த பெண்களை பல்வேறு  துறை அதிகாரிகள் பாராட்டினர். இதற்கான ஏற்பாட்டினை பைலட் பாபு குழுவினர் செய்துள்ளனர். இப்பயிற்சி தொடர்ந்து நான்கு நாள்கள் நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai