Enable Javscript for better performance
கொடைக்கானலில் மலர்க் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் மலர்க் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

    Published on : 28th May 2014 02:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் நடைபெற்ற மலர்க் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

    கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் இரண்டு நாள்கள் மலர்க் கண்காட்சி நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் கண்காட்சிப் போட்டியில் இடம் பெற்றனர்.

    இதில் மலர்த் தோட்டம் அமைத்தல், பூங்கா அமைத்தல், பூக்கள் பராமரித்தல், பல வகையான மலர் பாத்திகள் அமைத்தல், புல் வெளிகள் அமைத்தல், நர்சரி கார்டன் அமைத்தல் உள்ளிட்ட 56 வகையான போட்டிகள் நடைபெற்றன.

     போட்டியில் சிறந்த மலர்த் தோட்டம் அமைத்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கொடைக்கானல் கிளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. பரிசு வழங்கும் நிகழ்ச்சி பிரையண்ட் பூங்காவில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் ராமசாமி தலைமை வகித்து பரிசுகளை வழங்கினார். தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சின்ராசு முன்னிலை வகித்தார். சுற்றுலா அலுவலர் குணசேகரன் வரவேற்றார். தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் ராஜாங்கம், தடியன் குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய உதவி இயக்குநர் பிரமிதா, மேலாளர் எபன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மலர்க் கண்காட்சியை முன்னிட்டு கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இரண்டு நாள்களில் ரூ.11 லட்சத்து 56 ஆயிரத்து 460 வசூலானது. கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.15 ஆயிரம் கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளது. 50 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் பிரையண்ட் பூங்காவை பார்த்து ரசித்துள்ளதாக தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai