Enable Javscript for better performance
கொடைக்கானலில் மாரத்தான் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு  மாரத்தான் போட்டி நடைபெற்றது.

      கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து மாவட்ட விளையாட்டு ஆணையம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை படகு குழாம் சங்கத் தலைவர் ராமச்சந்திர துரைராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

     போட்டியில் திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல், நத்தம் ஆகியப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏரியைச் சுற்றி 10 கி.மீ தூரப் போட்டியில் ஆண்கள் பிரிவில் நத்தம் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் முதலிடமும், பிரபு இரண்டாமிடமும்,சுதாகர் மூன்றாமிடமும் பெற்றனர்.

       பெண்களுக்கான  5கி.மீ. மினி மாரத்தான் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த கஸ்தூரி முதலிடமும், கீர்த்திகா இரண்டாமிடமும், மகா மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு போக்குவரத்து ஆய்வாளர் சேதுராமன் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

     கோலப் போட்டியில் மூஞ்சிக்கல் பகுதியைச் சேர்ந்த பார்வதி முதலிடமும், சுமதி இரண்டாமிடமும், கிருஷ்ணவேணி மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விûளாட்டு அலுவலர் ஜோசப் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai