Enable Javscript for better performance
கோழி மேய்ந்ததில் தகராறு: கணவன்-மனைவி கைது- Dinamani

சுடச்சுட

    

    கோழி மேய்ந்ததைத் தட்டிக் கேட்டவரைத் தாக்கிய கணவன், மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள காப்பிலியபட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து(40). இவருடைய வீட்டின் அருகே ஈஸ்வரன்(47) என்பவர் வசித்து வருகிறார். ஈஸ்வரன் வளர்க்கும் கோழி கடந்த 18-ஆம் தேதி காளிமுத்து வீட்டு அருகே அசுத்தம் செய்து விட்டதாம். இது குறித்து காளிமுத்து, ஈஸ்வரனிடம் கேட்கும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் ஈஸ்வரனின் மனைவி ராஜேஸ்வரி(35), மகன் வீராச்சாமி ஆகியோர் காளிமுத்துவை தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் காயம் அடைந்த காளிமுத்து ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து காளிமுத்து கொடுத்த புகாரின்பேரில் அம்பிளிக்கை போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரன், மனைவி ராஜேஸ்வரியை கைது செய்து மகன் வீராச்சாமியை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai