Enable Javscript for better performance
சென்னை-பழனி ரயில் 3 மணி நேரம் தாமதம்- Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, சென்னையிலிருந்து பழனி சென்ற விரைவு ரயில் 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.

    சென்னை- பழனி இடையே தினசரி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. திங்கள்கிழமை இரவு சென்னையிலிருந்து புறப்பட்ட பழனி ரயில், அரக்கோணம் பகுதியில் வந்தபோது தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சுமார் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பிரச்னைகள் சரி செய்யப்பட்டு, மீண்டும் இயக்கப்பட்ட அந்த ரயில், அதிகாலை 5.30 மணிக்கு பதிலாக, காலை 8.30 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai