Enable Javscript for better performance
பழனி அருகே பெண்ணை தாக்கியதாக 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்கியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.

    பழனி அருகே கே.வேலூரைச் சேர்ந்தவர் நல்லம்மாள் (45). பெட்டிக்கடை வைத்துள்ளார்.  இவரது கடைக்கு வந்த பாப்பம்பட்டியைச் சேர்ந்த கருப்புச்சாமி (24) என்பவர் ரூ.5 கொடுத்து பீடி மற்றும் தீப்பெட்டி கேட்டுள்ளார். அப்போது நல்லம்மாளிற்கும், கருப்புச்சாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கருப்புச்சாமி, அவரது சகோதரர் செல்லத்துரை (33) ஆகியோர் உருட்டுக் கட்டையால் நல்லம்மாள், அவரது மகன் சின்னத்துரை, பக்கத்து கடையைச் சேர்ந்த சின்னமணி ஆகியோரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து நல்லம்மாள் கொடுத்த புகாரின்பேரில் பழனி தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து கருப்புச்சாமி மற்றும் செல்லத்துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai