Enable Javscript for better performance
மத்திய அரசுக்கு தொழில் வர்த்தக சங்கம் நன்றி- Dinamani

சுடச்சுட

    

    அந்திய முதலீட்டுக்கு அனுமதி கிடையாது என மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கிருபாகரன் தெரிவித்துள்ளது:

     இந்தியாவின் 15ஆவது பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கு, தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் வர்த்தக துறை இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீத்தாராமனுக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, அவரது முதல் உத்தரவான சில்லறை வணிகத்தில் அந்திய முதலீட்டுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்புக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.  இதேபோல் நாடு முழுவதும் உள்ள சிறு வணிகர்களை பாதிக்கக்கூடிய உணவு பாதுகாப்புச் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் கோரிக்கையை முன் வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai