Enable Javscript for better performance
மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு உதவித்தொகை - Dinamani

சுடச்சுட

    

    பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

     தொப்பம்பட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட கரியாம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த விவசாயி சேனாபதி-அம்சவேணி ஆகியோரின் மகள் எஸ்.வர்ஷினி. தாராபுரம் விவேகம் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ்-99, ஆங்கிலம்-100, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 மொத்தம் 499 ஆகும். மாணவி வர்ஷினியை பாராட்டி, ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அர.சக்கரபாணி  உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கினார். உடன் தொப்பம்பட்டி ஒன்றியச் செயலர் சி.ராஜாமணி, மாணவியின் பெற்றோர், கே.புளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.கோதண்டராமன், ஆசிரியர் ராமசாமி, சக்திவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai